தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிப் பொருள்கள் வழங்கல்

எட்டுக்குடி ஊராட்சியிலுள்ள சுமார் 75க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிளுக்கு திமுக சார்பில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினரும்‌, முன்னாள் பால் வளத்துறை அமைச்சருமான மதிவாணன்

DIN

எட்டுக்குடி ஊராட்சியிலுள்ள சுமார் 75க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிளுக்கு திமுக சார்பில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினரும்‌, முன்னாள் பால் வளத்துறை அமைச்சருமான மதிவாணன் தலைமையில் அரிசி, காய்கறி  உள்ளிட்ட மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு பொருட்களை வழங்குவதற்கு முன்னாள் அவர்களது கைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு சமூக இடைவெளி இன்படி நாற்காலியில் அமர வைத்து ஒருவர் பின் ஒருவராக இந்த நிவாரணப் பொருள்கள் அனைத்தும் வழங்கப்பட்டது. 

உடன் இந்நிகழ்வில் ஒன்றிய‌ பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன், நாட்டு பிரதிநிதி ஞானசேகரன், கீழையூர் 7ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் கவுன்சிலர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்களான எட்டுக்குடி காரல்மார்க்ஸ், திருவாய்மூர் நரசிம்மன், விவசாய அணியினை சேர்ந்த ஸ்ரீதர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், ஊராட்சி செயலர்களான கலியமூர்த்தி, சுப்பிரமணியன், முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT