முகப்பு
தமிழ்நாடு

வலையில் சிக்கிய பாம்பை மீட்ட இளைஞர் பாம்பு கடித்து சாவு

சீர்காழி அருகே கொல்லைபுறத்தில் வலையில் சிக்கிய பாம்பை பரிதாப பட்டு மீட்ட இளைஞரை அதே பாம்பு கடித்து சனிக்கிழமை இறந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

சீர்காழி அருகே கொல்லைபுறத்தில் வலையில் சிக்கிய பாம்பை பரிதாப பட்டு மீட்ட இளைஞரை அதே பாம்பு கடித்து சனிக்கிழமை இறந்தார்.

சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் ராஜசேகர்(37). இவர்அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் கொள்ளை புறத்தில் பாம்பு புகாமல் இருக்க கட்டியிருந்த வலையில் 6 அடி நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று சிக்கியிருந்தது. வலையில் சிக்கி உயிருக்கு போராடிய விஷபாம்பை ராஜசேகர் மீட்க முயன்ற போது அவரது கையில் பாம்பு கடித்துள்ளது. 

இதில் விஷம் ஏறிய நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட ராஜசேகர் மேல் சிகிச்சைக்காக பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்றவர் அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் ராஜசேகர் பாம்பை மீட்கும் போது பாம்பு கடித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →