தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 669 பேருக்கு கரோனா தொற்று

DIN


தமிழகத்தில் புதிதாக 669 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 669 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 412 பேர் ஆண்கள், 257 பேர் பெண்கள். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,959 ஆக உள்ளது.

இதைத் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,195 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 12,962 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் பரிசோதிக்கப்பட்டவர்கள் 2,32,368.

தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப்பட்டத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 509 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 47 பேருக்கும், செங்கல்பட்டில் 43 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT