தமிழ்நாடு

திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து மேலும் 4 பேர் வீடு திரும்பினர்!

DIN

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 4 பேர் திங்கள்கிழமை பிற்பகல் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, இந்த மாவட்டங்களில் இருந்து 121 பேர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், குணமடைந்த நபர்கள் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். 

இதன்படி, திங்கள்கிழமையும் 4 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 4 பேருக்கும் டிஸ்சார்ஜ் விவர அறிக்கைகளை மருத்துவமனை டீன் வனிதா வழங்கினார். மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஏகநாதன், அரசு மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் கரோனா வார்டில் பணிபுரிந்த அனைவரும் வீடு திரும்பும் 4 பேருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கைகளை தட்டி உற்சாகப்படுத்தி வழியனுப்பினர். 

திருச்சி மருத்துவமனையிலிருந்து இதுவரை 76 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இவர்களைத்தவிர, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், பெரம்பலூரைச் சேர்ந்த 29 பேர், அரியலூரைச் சேர்ந்த 5 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் என மேலும் 45 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT