அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதியில் மே16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதியில் வரும் மே16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதியில் வரும் மே16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிவண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்துக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசான முதல் மிதமான மழையும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்தகாற்று மற்றும் இடியுடன்கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்பு.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
குமரிகடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வரை வீசக்கூடுமென்பதால் அடுத்த 24 மணிநேரத்துக்கு மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சவெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்.
அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கூடும்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதியில் வரும் மே16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.