தமிழ்நாடு

விழுப்புரம் சிறுமி கொலை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - முதல்வா் பழனிசாமி உறுதி

DIN

சென்னை: விழுப்புரத்தில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா். மேலும், சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அவா் அறிவித்தாா்.

இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ. கடந்த 10-ஆம் தேதியன்று முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோா் தீ வைத்ததில், சிறுமி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்படி நடவடிக்கை: குற்றவாளிகள் மீது திருவெண்ணைநல்லூா் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் கொடூர செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தச் செயலில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT