தமிழ்நாடு

மதுரை தியாகராஜர் கல்லூரியில் தேசிய அளவிலான ஆன்லைன் பயிற்சிப்பட்டறை

DIN

மதுரை தியாகராஜர் கல்லூரியில் மே 7 ஆம் தேதி முதல் மே 11 ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற்ற 'சமூக அறிவியல் ஆராய்ச்சியில் தரவு பகுப்பாய்வு'க்கான தேசிய அளவிலான ஆன்லைன் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.  

இந்த ஆன்லைன் பயிற்சிப்பட்டறையில் இந்தியா முழுவதிலும் இருந்து 1,300 விண்ணப்பங்கள் வந்தன. மேலும் சில பங்கேற்பாளர்கள் நைஜீரியா, அந்தமான் நிக்கோபார் தீவு, பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பங்கேற்றனர். 

தியாகராஜர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பிரகாஷ் காணொலி வாயிலாக இதனைத் தொடக்கி வைத்தார். கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் தரவு பகுப்பாய்வு நிபுணர் டாக்டர் கே.தியாகு, நாகாலாந்து மத்தியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் வி.பி.ஜோசித், திருநெல்வேலி எஸ்.டி. சேவியர்ஸ் கல்வியியல் கல்லூரியின் டாக்டர் மைக்கேல் ஜே லியோ, பெங்களூர் கிறிஸ்து பல்கலைக்கழகத்தின் டாக்டர்.பிரகாசா, மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பி. முத்துபாண்டி, தியாகராஜர் கல்வியியல் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியர் திரு எஸ். அன்பழகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர், உதவிப் பேராசிரியர் ஆர்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஊரடங்கு காலத்தை உபயோகமாக பயன்படுத்த பயிற்சிப்பட்டறை பெரிதும் உதவியாக இருந்தது என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற தேசிய அளவிலான பயிற்சிப்பட்டறை தொடர்ந்து நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT