தமிழ்நாடு

சிதம்பரத்தில் திமுக சார்பில் 650 குடும்பங்களுக்கு நிவாரணம்

DIN

சிதம்பரத்தில் கரோனா நோய்த் தொற்று ஊரடங்கு போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக சார்பில் 650 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. 

சிதம்பரம் நகரில் கரோனா நோய்த் தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கும் போது பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 17 மற்றும் 10வது வட்டத்துக்கு உட்பட்ட சுமார் 650 குடும்பங்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் தலா 5 முட்டை உள்ளிட்ட தொகுப்பினை சிதம்பரம் நகர திமுக செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன் செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் நகரத் துணைச்  செயலாளர்கள் சி.பன்னீர்செல்வம், பா.பாலசுப்ரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் இரா.வெங்கடேசன், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்  ப.அப்பு சந்திரசேகரன், நகர இளைஞரணி அமைப்பாளர்  மக்கள் க.அருள், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள்  ஏ.ஆர்.சி.மணிகண்டன், பி.எஸ்.ராஜராஜன், நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், நகரச் செயற்குழு உறுப்பினர் ஆர் இளங்கோவன்  மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் வேலு, பச்சையப்பன், ஆறுமுகம், கண்ணதாசன், தொழில்நுட்ப அணி ஜெகதீசன், ரவி , ராமு , சதீஷ்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT