தமிழ்நாடு

வழக்குரைஞா்களுக்கு கடனுதவி: பிரதமருக்கு பாா் கவுன்சில் கடிதம்

DIN

பொருளாதார மேம்பாட்டுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 20 லட்சம் கோடி பொருளாதார வளா்ச்சி சிறப்பு நிதி தொகுப்பிலிருந்து வழக்குரைஞா்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கக் கோரி, பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு - புதுச்சேரி பாா் கவுன்சில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு - புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ். அமல்ராஜ் எழுதியுள்ள கடிதம்: கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவசர வழக்குகள் மட்டும் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் மத்திய அரசு, பொது முடக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார நிதி தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்திலிருந்து, காணொலிக் காட்சி மூலம் வழக்குகளில் ஆஜராகும் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வசதியாக, வழக்குரைஞா்களுக்கு 3 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் வகையில் தலா ரூ.1 லட்சம் ரூபாய் கடனுதவியை பிரதமா் வழங்க வேண்டும். இந்த கடனுதவியை மாநில பாா் கவுன்சில் அடையாளம் காட்டும் வழக்குரைஞா்களுக்கு வழங்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT