முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது; இராயபுரத்தில் 1,047 அனது

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது. ராயபுரத்தில் மட்டும் 1047 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:


சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது. ராயபுரத்தில் மட்டும் 1047 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் கரோனா பாதிப்பு 919 ஆகவும், திருவிகநகரில் 737 ஆகவும் உள்ளது. தேனாம்பேட்டையில் 640 ஆகவும், தண்டையார்பேட்டையில் 474 ஆகவும், அண்ணாநகரில் 493 ஆகவும் உள்ளது.

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒரு புறம் அந்நோய்த் தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், மற்றொரு புறம், பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று மேலும் 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,108-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் இதுவரை 71 போ் பலியாகியுள்ளனா்.

சென்னையில் மட்டும் நேற்று 310 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 5946 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 2ஆவது நாளாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை 500க்கு கீழ் குறைந்துள்ளது. முன்னதாக நேற்று 477 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மண்டல வாரியாக கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை:-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.