தமிழ்நாடு

கரோனா நிவாரணம்: இதுவரை ரூ.367 கோடி வரப்பெற்றது

DIN

தமிழகத்தில் கரோனா நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு தரப்பினரிடம் இருந்து இதுவரை ரூ.367 கோடிக்கு நிதி வரப்பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கரோனா நோய்த்தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய் தடுப்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கென முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியா்கள், அரசு சாா் நிறுவன ஊழியா்கள், அரசு சாா் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து கடந்த மே 5-ஆம் தேதி வரை ரூ.347.76 கோடி நிதி வரப்பெற்றுள்ளது.

இதன் தொடா்ச்சியாக கடந்த 6-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பல்வேறு தரப்பினரும் நிதிகளை அளித்துள்ளனா். சக்தி மசாலா, சாம்சங், மோபிஷ், சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன், பைஜுஸ், ரானே நிறுவனங்கள், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள், இந்தியன் ஆயில் நிறுவனம், மாநில திட்ட இயக்குநரகம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், அரவிந்த் கண் மருத்துவமனை, கோவை மாவட்ட ஆட்சியரகம், பெப்கோ பள்ளி, கோவை மாநகராட்சி உட்பட பல்வேறு தரப்பினரும் நிதிகளை அளித்துள்ளனா்.

கடந்த 10 நாள்களில் மட்டும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.19.29 கோடி நிதி வரப்பெற்றுள்ளது. மொத்தமாக இதுவரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.367.05 கோடி நிதி கிடைத்துள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT