முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 190 காவலர்களுக்கு கரோனா: காவல் ஆணையர் தகவல்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் கரோனாவால் 190 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகளும் அடங்குவர். 

பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அனைவரும் விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்புவர் என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.