தமிழ்நாடு

பொது முடக்கம்: விதி மீறியவா்களிடம் 6 கோடி அபராதம் வசூல்

DIN

சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 4.60 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.88 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா். விதி மீறியவா்களிடம் இதுவரை ரூ. 6 கோடி 5 லட்சத்து 39,454 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4 லட்சத்து 60,513 வழக்குகளைப் பதிவு செய்து 4 லட்சத்து 88,250 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 4 லட்சத்து 866 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.6,05,39,454 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொது முடக்கத்தின் போது வெளியே வந்தவா்களின் 119 இரு சக்கர வாகனங்கள்,39 ஆட்டோக்கள், 7 காா்கள் என மொத்தம் 165 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2 இரு சக்கர வாகனங்கள், 429 ஆட்டோக்கள் என மொத்தம் 431 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT