ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு: கண்மாயில் விடுவிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் வீட்டுக்குள் நல்லபாம்பு ஒன்று புகுந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் வீட்டுக்குள் நல்லபாம்பு ஒன்று புகுந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காதி போர்டு காலணி பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் ராமநாதன் வீட்டிற்கு திங்கள்கிழமை நல்ல பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது.
பாம்பைப் பார்த்தவுடன் வீட்டிலிருந்தவர்கள் பாம்பை விரட்டும் நோக்கில் சத்தம் எழுப்பினர். உடனே பாம்பு சீற்றத்துடன் படமெடுத்து ஆடியது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து துணை வட்டாட்சியர் ராமநாதன் வீட்டிற்குச் சென்று பாம்பைப் பிடிக்க முயன்றபோது பாம்பு வீட்டுக்குள் அங்கும் இங்கும் ஓடியது.
சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பின்னர் அந்த நல்ல பாம்பைப் பிடித்தனர். சுமார் ஐந்து அடி நீளமுள்ளது. அதனை லாவகமாக மடக்கிப் பிடித்த தீயணைப்புத்துறையினர் அருகில் உள்ள கண்மாய் பகுதியில் உயிருடன் விட்டனர்.