தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு விடுப்பு எடுக்க அனுமதி இல்லை: பள்ளிக் கல்வித்துறை

DIN


சென்னை:   தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களைத் தவிர பிற காரணங்களுக்காக விடுப்பு எடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பொது முடக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களுக்குச் சென்ற ஆசிரியர்கள்  வரும் 21-ஆம் தேதிக்குள் தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், மருத்துவக் காரணங்களைத் தவிர பிற காரணங்களுக்காக விடுப்பு எடுக்கக் கூடாது என அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT