தமிழ்நாடு

கூடலூர் அருகே பழங்கால பொருள்கள் கண்டெடுப்பு

DIN


கம்பம்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே விவசாய நிலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மண்பாண்டப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் பெருமாள்கோவில் மலை அடிவாரத்தில் அமாவாசை என்பவருக்குச் சொந்தமான மானாவாரி நிலம் உள்ளது.  அந்த நிலத்தை சனிக்கிழமை உழுதபோது, சில மண்பாண்டங்கள், மண் ஜாடிகள் மற்றும் மனித எலும்புகள் கிடைத்துள்ளன. இதையடுத்து தொல்லியல் ஆய்வாளர் மோகன் குமாரமங்கலம் ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்திற்குச் சென்று பழங்காலப் பொருள்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

 பின்னர் அவர் கூறியது: சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை வாய்ந்த மண்ணால் செய்யப்பட்ட பொருள்களாக இவை காணப்படுகின்றன. 

தாழியில் எலும்பு கிடைத்துள்ளது. பாத்திரங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. தொன்மையான மக்கள் வசித்துள்ள பகுதியாக இப்பகுதி இருந்திருக்கக்கூடும். அரசு அனுமதி பெற்று ஆய்வு செய்ய உள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT