தமிழ்நாடு

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சேமிப்புத்  தொகை: சிறுமியின் சைக்கிள் ஆசையை நிறைவேற்றிய எஸ்.பி.

DIN

நாகப்பட்டினம்:  சைக்கிள் வாங்க வைத்திருந்த தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி அவரது சகோதரருக்கு நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம்  திங்கள்கிழமை சைக்கிள்களை வழங்கினார்.

நாகை மாவட்டம், காமேஷ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர்  பூமாலை. விபத்தில் ஒரு கையை  இழந்த இவர்  தற்போது நாகை மாவட்டக் காவலர் - நண்பர்கள் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு கரோனா விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது 10 வயது மகள் கனகா சைக்கிள் வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த ரூ. 2,210ஐ தமிழக முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு, நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயரை அண்மையில் நேரில் சந்தித்து வழங்கினார்.

இந்நிலையில், காவல்துறை இயக்குநர் டாக்டர் பிரதீப் வி.  பிலீப்( தமிழ்நாடு உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு) மற்றும்  காவலர் - நண்பர்கள் குழு சார்பில் சிறுமி கனகா, அவரது சகோதரர் கோகுல் ஆகியோருக்கு நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  செ. செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை சைக்கிளை வழங்கி பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT