சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் புறநகர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமையில் நிவாரணப் பொருள்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் முடி திருத்தும் தொழிலாளர்கள், ஒலி ஒளி அமைப்பு ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் காய்கறிகள் என நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் கே.பாலசுப்ரமணியம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முல்லை பன்னீர்செல்வம் துரை உடையார் மாணவரணி அமைப்பாளர் எஸ்.பர்கத்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.