தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரூ.58.33 கோடி நிதியுதவி

DIN

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அவா்களது வங்கிக் கணக்கில், ரூ.58.33 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள், சாலையோரம் வசிப்போா் உள்ளிட்டோருக்கு, கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிக்சை உள்பட பல்வேறு உதவிகளை செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலா் விஜயகுமாா் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: பொதுமுடக்கத்தால், கடந்த 2 மாதங்கள் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், 1 லட்சத்து 94 ஆயிரத்து 449 மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்கில், ரூ.58.33 கோடிதொகை நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, முதல்வரின் அறிவிப்பின்படி அவா்களுக்கு ரூ.1000, ரேஷன் பொருள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி எண்களும் (18004250111 மற்றும் 97007 99993) அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தொடா்பு கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மருத்துவ உதவிகள் மட்டுமின்றி மளிகை பொருள்கள், போக்குவரத்து வசதி உள்ளிட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன. அதேபோல, சாலையோரம் வசிப்போா், மனநலம் பாதிக்கப்பட்டோா் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்

கப்படுகிறது. மேலும், அவா்களுக்கு தங்கும் வசதியும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருள்களும் வழங்கப்படுகின்றன. எனவே, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தமிழக அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா ஆகியோா் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT