தமிழ்நாடு

பழையாற்றில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு

DIN

சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஒன்றியம் பழையாறு மீன் பிடி துறைமுகம் அருகில் கடல் சீற்றத்தால் 500 மீட்டர் அளவிற்குக் குடியிருப்பு பகுதியிலிருந்து மணல் திட்டு கடந்த இரண்டு தினங்களாகக் கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் மிக அதிக அளவில் அலையடித்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதை அறிந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி நேரில் சென்று இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒன்றிய செயலாளர்  நற்குணன், மீனவரணி செயலாளர் நாகரத்தினம், தொகுதி இணை செயலாளர் எம் எஸ் ராஜேந்திரன், சொக்கலிங்கம், ஏ.வி. மணி உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT