தமிழ்நாடு

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 35 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 35 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

மேல்விஷாரம் பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலைகளில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் பொது ஊடகத்தின் காரணமாக அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேல் விஷாரத்தில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் 35 பேரை இராணிப்பேட்டை மாவட்ட சார் ஆட்சியர் இளம்பகவத்,  ஊர் முக்கியஸ்தர் சுபியார் ஜப்ருல்லா முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் இப்ராகிம் கலிலுல்லா உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். 

அவர்களுக்கு  திருச்சியிலிருந்து சிறப்பு இரயில் செல்ல இருப்பதால் அவர்களுக்கு பிராட், பிஸ்கேட், தண்ணீர் கொடுத்து பேருந்து மூலம் திருச்சிக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். எல்லோரும் தமிழக அரசுக்கும், மேல்விஷாரம் காரோனா தடுப்பு குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT