தமிழ்நாடு

சென்னையில் மூன்று மண்டலங்களில் மட்டும் 4 ஆயிரம் கரோனா நோயாளிகள்

DIN

சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், இதுவரை 3,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 64 பேர் பலியாகிவிட்டனர்.

தற்போது 5,624 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

15 மண்டலங்களைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் மட்டுமே சுமார் 4 ஆயிரம் கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட 50% ஆகும்.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை 567 பேருக்கு, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 8,795-ஆக உயா்ந்துள்ளது.

ராயபுரம் மண்டலத்தில், 1,699 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,231 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.  திருவிக நகரிலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

தேனாம்பேட்டையில் 926 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 823 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி ஆலந்தூரில் மட்டுமே 100க்குக் குறைவான கரோனா நோயாளிகள் அதாவது 96 பேர் உள்ளன. மற்ற 14 மண்டலங்களிலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT