தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கரோனா பாதிப்பு 

DIN

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி இன்று 759 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 14,753-ல் இருந்து நேற்று 15,512 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 24 பேருக்கும், ராஜஸ்தானில் இருந்து திரும்பிய 6 பேர் உட்பட வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய  37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 7,915 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 5 பேர் உயிரிழந்தததை அடுத்து கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98-ல் இருந்து 103 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட 948 சிறார்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், கரோனா நோயாளிகளில் 9,876 பேர் ஆண்கள், 5,631 பெண்கள், 5 பேர் திருநங்கைகள் ஆவர்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 9,989 பேருக்கும், பிற மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 5,523 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT