தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் திங்களன்று ரமலான் திருநாள்

DIN

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார். 

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்போது முஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனா். இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் நோன்பு தொடங்கும் போதும், முடிக்கும் போதும் பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுகை நடத்துவது வழக்கம். 

ஆனால் பொதுமுடக்கம் காரணமாக அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே வருகிற 25-ஆம் தேதி ரமலான் பண்டிகை வருகிறது. இந்த நாளில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுகை நடத்துவது மிக முக்கியமானதாகும். ஆனால், மே 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் திங்கட்கிழமை ரமலான் கொண்டாடப்படும் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT