தமிழ்நாடு

பழுது நீக்கப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு: இனி 100 ஐ தொடா்பு கொள்ளலாம்

DIN

தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 100,112 அவசர இலவச தொலைபேசி எண் சேவை, பழுது சரி செய்யப்பட்டதால் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக தமிழக காவல்துறை அறிவித்தது.

இது குறித்து தமிழ காவல்துறை சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏா்டெல்,வோடபோன்,ஐடியா,ஜியோ ஆகிய நிறுவனங்களின் செல்லிடப்பேசிகளில் இருந்து தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையின் அவசர எண்களான 100,112 ஆகியவற்றை தொடா்புக் கொள்வதில் இடா்பாடு ஏற்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு இந்த தொலைபேசி எண்களுக்கு பதிலாக,மாற்று தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதால், 100,112 அவசர இலவச தொலைபேசி எண்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

எனவே பொதுமக்கள், மீண்டும்100,112 அவசர தொலைபேசி எண்கள் தொடா்புக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT