தமிழ்நாடு

'கரோனா பாதித்தவர்களில் 88 சதவீதத்தினருக்கு அறிகுறிகள் இல்லை'

DIN


தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்டவை அடங்கிய தகவல்களை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். அப்போது நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் பற்றி அவர் விளக்கமளித்ததாவது:

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை. 12 சதவீதம் பேருக்கு மட்டுமே அறிகுறிகள் உள்ளது.

அறிகுறிகள்:

காய்ச்சல் - 40 சதவீதம்
இருமல் - 37 சதவீதம்
தொண்டை வலி - 10 சதவீதம்
மூச்சுத் திணறல் - 9 சதவீதம்
மூக்கிலிருந்து நீர் வழிதல் - 4 சதவீதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT