முகப்பு
தமிழ்நாடு

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவப் பரிசோதனைக்காக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
ஓ.பன்னீர்செல்வம்
பகிர்:


சென்னை: மருத்துவப் பரிசோதனைக்காக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று காலை வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றார்.

வழக்கமான மருத்துவப் பரிசோதனை முடித்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.