கரோனா தொற்று: ஓஎம்மங்களம் கிராம நிர்வாக அலுவலர் பலி
கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுங்குவார்சத்திரம் அடுத்த ஓஎம்மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை பலியானார்.
ஸ்ரீபெரும்புதூர்: கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுங்குவார்சத்திரம் அடுத்த ஓஎம்மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை பலியானார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட ஓஎம்மங்களம் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் ராஜாராம்(39). சென்னை சொளகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை வரை பணியில் இருந்துளார்.
இந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்ததால் ராஜாராமன் கடந்த வெள்ளிக்கிழமை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சனியன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜாராம் செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி பலியானார்.