முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்து மாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்

விழுப்புரம் நகரில் நேருஜி சாலை முதல் கிழக்கு பாண்டி ரோடு வரை விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 27 மே, 2020 at 3:47 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:12 PM

விழுப்புரம் நகரில் நேருஜி சாலை முதல் கிழக்கு பாண்டி ரோடு வரை விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரூபாய் 12 கோடி மதிப்பில் விரிவாக்கமும், கால்வாய் அமைக்கும் பணிகளும் நடைபெற்றது. இதில் சாலையோரம் இருந்த முருகர் கோயில் சிறிய மாதா கோயில் விநாயகர் கோவில் போன்றவை பெரும் போராட்டத்திற்கு இடையே இடித்து அகற்றினர்.

தொடர்ச்சியாக விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் புத்துமாரியம்மன் கோவிலை இடிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென புதன்கிழமை காலை அந்த மாரியம்மன் கோவில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினரால் இடித்து அகற்றப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.