முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து ரூ.8.84 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களின் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 8.84 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களின் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 8.84 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றை தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரம் வழக்குகளைப் பதிவு செய்து, 5 லட்சத்து 53,543 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். 

பொது முடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 4 லட்சத்து 33,101 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.8 கோடியே 84 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →