முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.38,072-க்கு விற்பனை

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.38,072-க்கு விற்பனை
பகிர்:

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருக்கிறது. கடந்த 27-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது. ஒரு நாளைக்கு பிறகு தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது.

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.38,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.1 குறைந்து, ரூ.4,759 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு 90 காசுகள் உயா்ந்து, ரூ.66.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து, ரூ.66,200 ஆகவும் உள்ளது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

 1 கிராம் தங்கம்............................. 4,759

 1 சவரன் தங்கம்............................... 38,072

 1 கிராம் வெள்ளி............................. 66.20

 1 கிலோ வெள்ளி............................. 66,200

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,760

1 சவரன் தங்கம்...............................38,080

1 கிராம் வெள்ளி.............................65.30

1 கிலோ வெள்ளி.............................65,300  

முழு கட்டுரையைப் படிக்க →