முகப்பு
தமிழ்நாடு

தொண்டர்களை மதிக்கும் கட்சி அதிமுக மட்டுமே: ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல்

சேலம் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
தொண்டர்களை மதிக்கும் கட்சி அதிமுக மட்டுமே: ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல்
பகிர்:

சேலம் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை அறிமுகக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. 

இதில் காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு மற்றும் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள சிறப்பாக செயல்பட்டு வந்த அதிமுக உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதிமுக தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை அறிவித்தனர். இந்த அறிவிப்பிற்கு அதிமுக ஒருங்கினைப்பாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் புதியதாக பதவியேற்றுள்ள நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்பு அவர் பேசும்போது சாதாரண தொண்டனாக இருந்த நமது முதல்வர் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியேற்றி, கோட்டையில் கொடியேற்றும் அளவிற்கு தொண்டனை மதிக்கும் கட்சி அதிமுக மட்டுமே என புகழாரம் சூட்டினார்.

பொறுப்பேற்று கொண்ட நிர்வாகிகளான நீங்கள் அதிமுகவின் தூண்களாக திகழவேண்டும், தொடர்ந்து பேசிய அவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் பேசினார்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைசெயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சேரன்செங்கோட்டுவன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசந்திரன், காடையாம்பட்டி வடக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.