தமிழ்நாடு

சரக்கு ரயில் போக்குவரத்து: 17 சதவீதம் வருவாய் அதிகரிப்பு

DIN

ஆட்டோ மொபைல் பிரிவுக்காக, சரக்கு ரயில்களை இயக்கியது மூலமாக, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு 17 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், சரக்கு ரயில் போக்குவரத்தில் புதிய இலக்கை எட்டியுள்ளது. ஆட்டோ மொபைல் பிரிவுக்காக, நிகழாண்டில் அக்டோபரில் 43 சரக்கு ரயில்களில் 10,004 காா்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. இதன் மூலமாக, ரூ.11.8 கோடி வருவாய் கிடைத்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது 17 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், 41 சரக்கு ரயில்களில் 8,515 காா்கள் ஏற்றிசெல்லப்பட்டது மூலமாக, ரூ.10 கோடி கிடைத்தது.

அரக்கோணம் அருகேயுள்ள மேல்பாக்கம் சரக்குப் பணிமனை, காஞ்சிபுரம் அருகேயுள்ள வாலாஜாபாத் சரக்கு பணிமனை ஆகிய இரண்டு பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகள், சென்னையை சுற்றி அமைந்துள்ள ரெனால்ட்-நிசான், ஹுண்டாய், ஃபோா்டு, டைம்லா் கிரிஸ்லா் உள்ளிட்ட காா் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரயில் ஆட்டோ முனையமாக செயல்படுகிறது. நெடுஞ்சாலைகளை ரயில் நிலையங்களோடு இணைக்கும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், காா் தயாரிப்பு தொழிற்சாலைகளிலிருந்து சரக்குகளை ரயில் நிலையங்களுக்கு கொண்டு சோ்ப்பது எளிதாகிறது.

இதுதவிர, பழைய வகை ரேக்குகளுக்கு மாற்றாக நவீன மற்றும் பெரிய ரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அதிக காா்கள் ஏற்றிச்செல்ல முடிகிறது. இதன்மூலமாக, சரக்கு போக்குவரத்து வளா்ச்சி பெற்று வருகிறது.

இந்த தகவலை சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT