தமிழ்நாடு

பொதுத்துறை மண்டல அலுவலகங்கள் முன் நவ.9-ல் முற்றுகை போராட்டம்

DIN

தமிழக அரசின் போனஸ் அறிவிப்பை மறுபரிசீலனை செய்யப்படாவிட்டால் பொதுத்துறை மண்டல அலுவலகங்கள் முன் நவ.9ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொ.மு.ச  பேரவை பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. சண்முகம் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்துக்குத் தலைமை வகித்த சண்முகம் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

தமிழக அரசு கரோனா  தொற்றைக் காரணம் காட்டி பொதுத் துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்குவதாகத் தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

இதைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், நவ.9 ஆம் தேதி போக்குவரத்துத் துறை, மின்சார துறை, டாஸ்மாக், சர்க்கரை ஆலை உள்பட அனைத்து பொதுத் துறைகளின் மண்டல அலுவலகங்களைத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவர் என்றார் சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT