அவிநாசியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் 
தமிழ்நாடு

அவிநாசியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.50 சதவீத போனஸ்

அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு இந்தாண்டு 13.50 சதவீதம் போனஸ் வழங்குவது என இருதரப்பு பேச்சுவார்த்தையில் வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்யப்பட்டது.

DIN

அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு இந்தாண்டு 13.50 சதவீதம் போனஸ் வழங்குவது என இருதரப்பு பேச்சுவார்த்தையில் வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அவிநாசி ஒன்றிய பகுதி விசைத்தறி கூலித் துணி உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளும், விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்ற தீபாவளி போனஸ் குறித்த பேச்சுவார்த்தை கூட்டம் அவிநாசி தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இதில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸôக 13.50 சதவீதம் வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. உற்பத்தியாளர் சங்கம் தரப்பில் முத்துச்சாமி, செந்தில், நடராஜ், தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு மாநிலத் தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய நிர்வாகி பழனிச்சாமி, செல்வராஜ்(ஏஐடியூசி), வேலுச்சாமி(ஏடிபி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது?

‘கிராவிடாஸ்’ தொழில்நுட்பத் திருவிழா - விஐடியில் நாளை தொடக்கம்

மக்களால் மாற்றப்பட்ட முடிவு! நிறுத்தப்பட்ட டி.வி. நிகழ்ச்சி மீண்டும் தொடக்கம்!

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் விடுவிப்பு

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT