டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அரசு போக்குவரத்து கழகம், மின்வாரியப் பணியாளர்கள் உள்பட அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் 10 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 8.33 சதவிகித போனஸ் மற்றும் 11.37 சதவிகித கருணைத்தொகை என 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது கரோனா பொது முடக்கத்தின் காரணமாக 10 சதவிகிதம் மட்டுமே போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.