முகப்பு
தமிழ்நாடு

பட்டாசு வெடிப்பதற்கு தடை வேண்டாம்: ராஜஸ்தான், ஒடிசா முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்கக்கோரி அம்மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
பகிர்:

ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்கக்கோரி அம்மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனினும் கரோனா தொற்று பரவலின் மத்தியில் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டாசு விற்பனையாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை ஒடிசா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், “காற்று, ஒலி மாசு விதிகளின்படி தமிழகத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவிகிதத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பட்டாசு உற்பத்தியில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்கள் உள்ளிட்ட 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இதன்காரணமாக பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழக முதல்வர் தனது கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →