திண்டுக்கல்லில் பாஜகவினர் 500 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் வேல் யாத்திரை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி கோரி பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட பாஜகவினர் வெள்ளிக்கிழமை முயற்சித்தனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை, கொடைக்கானல் ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன் தலைமை வகித்தார்.