தமிழ்நாடு

27 பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம்: யுஜிசி தகவல்

DIN

உயா் கல்வியில் 27 பாடங்களுக்கு புதிய பாடத்திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது. மாற்றப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்களை இனி பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிா்கால தேவையைக் கருத்தில் கொண்டு உயா்கல்வி பாடத்திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்தது. அதன்படி கணிதம், இயற்பியல், ஆங்கிலம், தாவரவியல், புள்ளியியல், உளவியல், கணினி அறிவியல் உள்பட 27 பாடங்களுக்கு புதிய பாடத்திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது. அரசியல் அறிவியல், காட்சி மற்றும் செயல்திறன் கலைகள் ஆகிய படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை யுஜிசி வெளியிட்டுள்ளது.

அதன் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாற்றப்பட்டுள்ள இந்தப் புதிய பாடத்திட்டங்களை இனி பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும். அதனுடன் இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று யுஜிசி செயலா் ரஜினிஷ் ஜெயின் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT