முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அருகே விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

காவிரி -சரபங்க நீரேற்றுத் திட்டத்தை விளைநிலங்கள் பாதிக்காமல் கொண்டு செல்ல வேண்டி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்
பகிர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மல்லப்பனூர் பிரிவு சாலையில் காவிரி -சரபங்க நீரேற்றுத் திட்டத்தை விளைநிலங்கள் பாதிக்காமல் கொண்டு செல்ல வேண்டி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு தலைமையில் இன்று நடைபெற்றது.

மேட்டூர் அணையின் உபரி நீரை வறண்ட 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் ரூ. 525 கோடி செலவில் நடைபெறுகிறது. இத்திட்டத்திற்காக 2,466 விவசாயிகளிடம் இருந்து 276 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. 

மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி தாலுகாக்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு இயற்கை நீர்வழிப் பாதைகள் உள்ளன. அந்த நீர் வழிப் பாதைகளை தவிர்த்து விவசாயிகள் பாதிக்கும் வகையில் விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்தும் இந்த கருப்புக் கொடி ஏந்திய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு கருத்துக் கேட்பு மற்றும் ஆட்சேபனை நோட்டீஸ் வினியோகித்து 60 நாள் காலக்கெடு இருக்கும்பொழுது முன்னதாகவே காவல்துறையை வைத்து வருவாய்த் துறை அதிகாரிகள் விவசாயிகளை மிரட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று இரவில் திடீரென வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் விவசாய நிலத்தை பார்வையிட வந்ததால் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற கருப்புக் கொடி ஏந்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். தமிழக அரசை கண்டித்தும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் விவசாயிகள் கோஷமிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →