கொடைக்கானலில் இ-பாஸை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இ-பாஸை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இ-பாஸை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுற்றுலாவை நம்பி வாழக் கூடிய பொதுமக்களின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்படுவதால் நாம் தமிழர் கட்சியின் சார்பாகவும் கொடைக்கானல் சுற்றுலா வாகனங்கள் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள், வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
கொடைக்கானலில் இ-பாஸை ரத்து செய்யக் கோரியும், கொடைக்கானல் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மன மகிழ்ச்சியோடு சுற்றுலா இடங்களை கண்டு களிக்கவும், சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ள சூசைட் பாயிண்ட், பில்லர் ராக், பைன் பாரஸ்ட், குணா குகை, மோயர் பாயிண்ட், போட் கிளப் ஆகிய சுற்றுலா இடங்களை திறக்கக் கோரியும் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, சுங்கச்சாவடி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பிரேம்சந்த் தலைமையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனால் வெள்ளிநீர் அருவிப் பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.