அருப்புக்கோட்டையில் கணவனை இழந்த ஏழைப்பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நிவாரண நிதி வழங்கிய விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ்  துணைத்தலைவர் ம.அய்யனார்,மற்றும் அ.பழனிவேல்,அ.பகவத்சிங் உள்ளிட்டோர். 
தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் கணவனை இழந்த ஏழைப் பெண்களுக்கு நிவாரணப்பொருள்கள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுக் கணவனை இழந்த ஏழைப்பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நிவாரண நிதி ஆகியன புதன்கிழமை வழங்கப்பட்டன.

DIN

அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ம. அய்யனார் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுக் கணவனை இழந்த ஏழைப்பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நிவாரண நிதி ஆகியன புதன்கிழமை வழங்கப்பட்டன.

விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ம.அய்யனார் தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை திருநகரம், புளியம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த கணவனை இழந்த ஏழைப் பெண்களுக்குத் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலவச சேலை மற்றும் நிவாரண நிதி ஆகியவற்றை ம. அய்யனார் தனதுஅலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது நேரில் வழங்கினார்.

அப்போது சுமார் 100க்கு மேற்பட்ட பெண்கள் நிவாரண உதவிகளைப் பெற்றுப் பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தனியார் நிதிநிறுவன இயக்குநர்கள் அ.பழனிவேல், அ.பகவத்சிங் உள்ளிட்ட சமூகத் தொண்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோரும்,மேலும் 100க்கு மேற்பட்ட பயனாளிகளும் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

SCROLL FOR NEXT