தமிழ்நாடு

பொது நூலகங்களுக்கு புத்தகங்களை விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்: பதிப்பகங்களுக்கு அழைப்பு

DIN

சென்னை: பொது நூலகத் துறைக்குத் தேவையான புத்தகங்களை விற்பனை செய்ய விரும்பும் பதிப்பகங்கள் நூலகத் துறைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பொது நூலகத் துறை இயக்குநா் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள செய்தி: ‘தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கத்தின்கீழ் இயங்கும் நூலகங்களுக்கு 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டில் பதிப்பான தமிழ், ஆங்கிலம் நூல்கள் வாங்க பதிப்பாளா்கள், விற்பனையாளா்களிடமிருந்து நூல்கள் பரிசீலனைக்காக வரவேற்கப்படுகின்றன. அரசால் அமைக்கப்படும் நூல் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் நூல்கள் மட்டுமே வாங்கப்படும்.

2018 மற்றும் 2019-ஆம் ஆண்டு பதிப்பான தமிழ், ஆங்கில நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.நூல்களை அதற்குரிய வடிவங்களுடன் டிசம்பா் 11-ஆம் தேதிக்குள் ‘பொது நூலக இயக்ககம், அண்ணாசாலை, சென்னை’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். நூல் பதிவுக் கட்டண விவரம் மற்றும் நூல்கள் சமா்ப்பிப்பதற்கான வழிமுறைகள், நிபந்தனைகள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன’ என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT