சென்னையில் கரோனா நிலவரம் மண்டல வாரியாக
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 2,06,588 பேரில் இதுவரை 1,97,091 பேர் குணமடைந்துள்ளனர். இது 95 சதவீதமாகும்.
சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 2,06,588 பேரில் இதுவரை 1,97,091 பேர் குணமடைந்துள்ளனர். இது 95 சதவீதமாகும்.
கரோனா பாதித்தவர்களில் 3,747 பேர் அதாவது 1.81 சதவீதம் பேர் பலியாகிவிட்டனர். தற்போது, 5,750 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இது 3 சதவீதமாகும்.
சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணாநகரில் 473 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அண்ணா நகரில் மட்டுமே 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேவேளையில், கோடம்பாக்கத்தில் மட்டுமே 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
மிகக் குறைந்த அளவாக மணலியிலும், சோழிங்கநல்லூரிலும் 100-க்கும் குறைவானோர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கத்தில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
மண்டலவாரியாக நிலவரம்: