தீபாவளி: ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாள்கள் விடுமுறை 
தமிழ்நாடு

தீபாவளி: ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் சனிக்கிழமை (நவ.14) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை வார இறுதி நாள்களில் வந்ததால், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் நான்கு நாள்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கும் நான்கு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பினால், தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டோருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT