உதயச்சந்திரனின் தந்தை காலமானார்
தமிழக தொல்லியல் துறை ஆணையரான டி. உதயச்சந்திரனின் தந்தை தங்கராஜ் (77) காலமானார்.
நாமக்கல்: தமிழக தொல்லியல் துறை ஆணையரான டி. உதயச்சந்திரனின் தந்தை தங்கராஜ் (77) காலமானார்.
நாமக்கல் என்.ஜி.ஓ.ஓ. காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (77). இவர் புதன்கிழமை இரவு உடல்நலக் குறைவால் காலமானார்.
இவருக்கு தமிழக தொல்லியல் துறை ஆணையரான டி. உதயச்சந்திரன் என்ற மகனும், வழக்குரைஞரான மதுமதி என்ற மகளும் உள்ளனர்.
Advertisement
அன்னாரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின் மயானத்தில் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9443001563.