முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 உயர்வு

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.27 உயர்ந்து, ரூ.38,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 உயர்வு
பகிர்:

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.27 உயர்ந்து, ரூ.38,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த 2-ஆம் தேதியில் இருந்து விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. 6-நாள்களுக்குப் பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விலை குறைந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.216 உயர்ந்து, ரூ.38,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.27 உயர்ந்து, ரூ.4,788 ஆக விற்பனையாகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி விலை உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.67.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து, ரூ.67,200 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,788

1 சவரன் தங்கம்............................... 38,304

1 கிராம் வெள்ளி............................. 67.20

1 கிலோ வெள்ளி............................. 67,200

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,761

1 சவரன் தங்கம்...............................38,088

1 கிராம் வெள்ளி.............................67.10

1 கிலோ வெள்ளி.............................67,100
 

முழு கட்டுரையைப் படிக்க →