முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,912 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,912 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 14 நவம்பர், 2020 at 6:18 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:22 PM


தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,912 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து 2-வது நாளாக 2 ஆயிரத்துக்கும் கீழ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 1,912 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,56,372 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 506 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய அறிவிப்பில் மேலும் 12 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,466 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் 2,494 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,27,752 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.