முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு (கோப்புப்படம்)
பகிர்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் என்றும், சென்னையில் லேசானது முதல் மிதான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

நவம்பர் 15-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →