முகப்பு
தமிழ்நாடு

மதுரை ஜவுளிக்கடையில் தீ: 2 தீயணைப்பு வீரர்கள் பலி

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:


மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

மதுரை தெற்கு மாசி வீதியில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. 

உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர். 

தீ மளமளவென கடையின் அனைத்து பகுதிக்கும் பரவியதால் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு வீரர்கள் மிகவும் போராடி வந்தனர். 

இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் 4 தீயணைப்பு வீரர்கள் சிக்கினர். 

இதில், படுகாயமடைந்த சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

நள்ளிரவு ஏற்பட்ட தீ, தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →